Blogger news

Saturday, 1 November 2014

ஏடிஎம் கார்டை இனி மாதம் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!

ஏ.டி.எம். கார்டை  மாதம் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் முறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவதற்கும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.

கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இந்த ஏ.டி.எம். கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படாமல் இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்.கார்டை இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

 

இந்த விதிமுறை பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, பணம் இருப்பு குறித்து அறிவதற்கும் பொருந்தும். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.

 


இந்த விதிமுறை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் நவ.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment