Blogger news

Saturday 8 November 2014

நவம்பர் 11 - தேசிய கல்வி தினம் - இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்

ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள் என தெரிந்த நம்மில் பல பேருக்கு  இந்தியாவின் தேசிய கல்வி தினம் என்றைக்கு என தெரிந்திருக்காது.

இதோ தெரிந்து கொள்ளுங்கள்.........

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்  மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர்  11 தான் தேசிய கல்வி தினம் என்று.


மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது  (11 நவம்பர் 1888 – 22 பிப்ரவரி 1958) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.  பாகிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப் போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.  உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான  பாரத ரத்னா  மறைந்த பிறகு வழங்கப்பட்டது.  
சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜியுடன் ஆசாத்

பரவலாக இவர்  மௌலானா ஆசாத் என அறியப்படுகிறார்;  ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். 


இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவர் ஆற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி  மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

No comments:

Post a Comment