TO DOWNLOAD NMMS APPLICATION
நமது வலைப்பதிவில் NMMS STUDY MATERIALS ஐ DOWNLOAD செய்து பயன்படுத்தலாமே
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -600 006
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)
செய்திக் குறிப்பு
தேசிய வருவாய்
வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின்
கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
உதவித் தொகை வழங்க
மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 27.12.2014.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 26.11.2014 முதல் 04.12.2014 வரை
இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் :
1. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சிமற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் ) 2014-2015 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும்
மாணவ / மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000/-
(ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) மிகாமல்
இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவார்.
2.
2013-14-ம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில் SC/ST மாணவ/மாணவிகள் 50% (ஐம்பது சதவீதம்) மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் அல்லது அதற்கு மேலும் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
NMMS - தேர்விற்கு
விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க இயலும். தலைமையாசிரியர்கள் தேவையான வெற்று விண்ணப்பங்களை 26.11.2014 முதல் 04.12.2014 வரை www.tndge.in என்ற
இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தலைமை
ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயின்று
வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை
தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் 05.12.2014- க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
தலைமை ஆசிரியர் தங்கள் பள்ளிக்குரிய
பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 05.12.2014 முதல் 08.12.2014 வரை பதிவு செய்தல் வேண்டும். புகைப்படத்தினை இணைய புகைப்படக் கருவி (வெப்கேமரா) மூலம் ஸ்கேனிங் அல்லது
பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
அருகிலுள்ள வட்டார வள மையங்களின் (BRC) உதவியுடன்
இணையதள வசதிகொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை
இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து
விண்ணப்பங்களையும் ஒரே கட்டாகவும், மொத்த
தேர்வு கட்டணத்தையும் ரொக்கமாக சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 11.12.2014 அன்று ஒப்படைக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும்
நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
முக்கிய நாட்கள்:
வெற்று விண்ணப்பங்களை இணையதளம் மூலம்
பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய நாட்கள்
|
26.11.2014 முதல் 04.12.2014 வரை
|
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
மற்றும் தேர்வுக்கட்டணம் தேர்வர்களிடமிருந்து பெற கடைசி நாள்
|
05.12.2014
|
தலைமை ஆசிரியர்கள் இணையதளம் மூலம்
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்
|
05.12.2014
முதல் 08.12.2014 வரை
|
தலைமை ஆசிரியர்கள் இணையதளம் மூலம்
பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களையும் தேர்வுக் கட்டணத்தையும் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம்
ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்
|
11.12.2014
|
No comments:
Post a Comment