Blogger news

Saturday 29 November 2014

நேரடி தனித்தேர்வர்கள் – SSLC செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான அறிவிப்பு



நேரடி தனித்தேர்வர்கள் 2014 2015 - ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி (SSLC) பொதுத்தேர்வில் கலந்து கொள்ள நடத்தப்பெறும் செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான விண்ணப்பம் அனுப்பும் அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு & விண்ணப்பம்

துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால் மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்: ஆய்வு



நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும் என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த, புது யுக்திகளை பயன்படுத்த, காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, திண்டுக்கல் தனியார் பள்ளியில், 45 மாணவர்களிடம், கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் நர்மதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாணவர்களின் எடை, ரத்தம், உணவுப் பழக்கம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நரம்பு செல்களில், துத்தநாகம் குறைந்த மாணவர்களின் அறிவு, கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்கள், துத்தநாக சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வதால் இந்தநிலை ஏற்பட்டதாக தெரியவந்தது. மாணவர்களின் உணவுப் பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது.

பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது: துத்தநாகம், நரம்பு செல்களுக்கு இடையேயுள்ள பொருள். நரம்பு மண்டலத்தில், நியூரான்கள் உருவாகவும், இடம் பெயர்தலுக்கும் பயன்படுகிறது. உடலில், 2.3 கிராம் அளவிற்கு இருக்கும். சிறந்த, ஆக்சிஜனேற்றியாக உள்ளதால், மூளைக்கு தங்குதடையின்றி தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது.

இது குறைந்தால், மாணவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுகிறது. உடம்பிற்கு, துத்தநாகம் குறைந்த அளவே தேவைப்பட்டாலும், மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. அவித்த முட்டை, பாசிப்பயிறு, பருப்பு வகைகளில் துத்தநாக சத்து உள்ளதால், அதை மாணவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது





திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  மாநிலங்களவையில் உத்திரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இதனை அறிவித்தார். இதற்கான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். இந்த பிரச்சினையை எழுப்பி பேசிய தருண் விஜய் இந்தியாவின் பழமையான செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை உணர வேண்டும் என வலியுறுத்தினார்.

வள்ளுவர் குறளின் சிறப்புகளை வட மாநிலங்களின் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில் அவரது பிறந்த நாளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என தருண் விஜய் கேட்டு கொண்டார்.

வட இந்தியாவை சேர்ந்த தருண் விஜயின் இந்த கோரிக்கையை பாராட்டும் விதமாக மாநிலங்களவையை சேர்ந்த தமிழக எம்.பி.க்களுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பிற மாநில எம்.பி.க்களும் கரஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.