உங்களுக்கு நன்றாக தெரிந்த விடைகளை முதலில் எழுதுங்கள்
முதல் பக்கத்தில் ஒரு விடையை எழுதிவிட்டு அடிக்காதிர்கள். அது உங்களை பற்றி ஒரு தாழ்ந்த எண்ணத்தை ஏற்படுத்தும்
சரியான வினா எண்ணை எழுதுங்கள். வெறும் c என்று எழுதினால் போதாது. அது எந்தக் கேள்வியில் உள்ள c என்பதைத் தெளிவாக எழுத வேண்டும்.
மிகச்சிறிய எழுத்துகளாக எழுதாதீர்கள். அது விடைத்தாள் திருத்துபவர்க்கு எரிச்சலைத் தரும்.
வரிக்கு வரி இடம் விட்டு எழுதுங்கள்.
ஒவ்வொரு விடை எழுதி முடித்தவுடன் ஒரு கோடு போடுங்கள்.
ஒவ்வொரு பக்கத்திலும் மேலே ஓர் அங்குலம், கீழே ஓர் அங்குலம் இடம் விடுங்கள்.
பெரிய விடைகளுக்கு ஒரு தலைப்புக் கொடுங்கள். அல்லது வினாவை எழுதி அடிக்கோடு இட்டுவிட்டு, விடை எழுதத் தொடங்குங்கள். இதனால் திருத்துபவரின் வேலை எளிதாகும். ஆனால் சிறு விடைகளுக்கு இது தேவையில்லை.
தெளிவான கையெழுத்து உங்கள் மதிப்பெண்களை உயர்த்தும்.
எழுதிய விடையை அடிக்க வேண்டுமென்றால், ஒரே ஒரு குறுக்குக் கோடு அழுத்தமாகப் போடுங்கள். மர்ஜினில் உள்ள வினா எண்ணையும் நன்றாக அடித்து விடுங்கள்.
மார்ஜினுக்கு உட்புறம் கேள்விa எண்ணைத் தவிர வேறு எந்த எண்ணையும் எழுதக் கூடாது. உங்கள் விடையில் உள்ள பாய்ன்ட் எண்களை மார்ஜினுக்குள் எழுதக்கூடாது.
தமிழ் மனப்பாடப் பகுதிகளை எழுதும்போது பா, சீர், அடி ஆகியவை கெட்டுவிடாமல் எழுதுங்கள்.
தமிழ்த் தேர்வில் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாதீர்கள். ஆங்கிலத் தேர்வில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
எழுத்துப்பிழை வருவதைத் தவிர்க்க, கடினமான சொற்கள் ஒவ்வொன்றையும் பத்துமுறை வீட்டில் எழுதிப் பாருங்கள்.
கணக்கில் ROUGH WORK தெளிவாகவும், அந்தந்த இடங்களிலேயே செய்ய வேண்டும்.
அறிவியல் வரைபடங்கள் அழகாக வரைய முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவை தெளிவாக இருப்பதுதான் முக்கியம்.
எந்த எண்ணையும் தெளிவாக, புரியும்படி கவனமாக எழுதுங்கள்.
தாள்களில் பக்க எண்களை அவ்வப்பொழுதே எழுதிவிட்டால், கடைசியில் குழப்பம் இல்லாமல் அடுக்க முடியும்.
தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனாவை விட மைப்பேனாவே சிறந்தது. விலை குறைந்த பால்பாய்ன்ட் பேனா உங்கள் மதிப்பெண்களையும் குறைத்து விடும்.
எத்தனை விடைகள் எழுத வேண்டுமோ, அவற்றை மட்டும் எழுதுங்கள். கூடுதலாக எழுதி, திருத்துபவரை ஏமாற்ற முயல வேண்டாம். எழுத வேண்டிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை எழுதவும்.
ஒரே விடையை இரண்டு இடங்களில் எழுதாதிர்கள்.
கேள்வித் தாளில் தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. அதற்காக விடை எழுதாமல் வந்து விடாதிர்கள். தவறுள்ள கேள்விக்கு நீங்கள் என்ன விடை எழுதினாலும், முழு மதிப்பெண் கிடைக்கும். ஒரே கேள்விக்கு பதில் எழுத அதிக நேரம் செலவிடவும் வேண்டாம்.
தேர்வு எழுதுவதற்குத் தரப்பட்டுள்ள முழு நேரத்தையும் பயன்படுத்துங்கள். ஒரு மணி நேரத்தில் எழுதி விட்டு வீட்டுக்குப் போவதால் நீங்கள் அடையும் இலாபம்தான் என்ன?
உங்கள் விடைத்தாளைத் திருத்தப்போவது ஒரு மனிதர், கம்ப்யூட்டர் அல்ல. அவருக்கு கோபமூட்டும்படி எதுவும் செய்யாதீர்கள்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் 10 நிமிடங்களாவது எழுதியதைப் படிக்கவும். தவறுகளை திருத்தவும், பக்கங்களை ஒழுங்குப்படுத்தவும் செலவிடவும்.
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை, நாளைக்குப் படிப்போம் என்றில்லாமல் அன்றைய தினமே படிக்க வேண்டும்.
தெளிவான உச்சரிப்புடன் வாய்விட்டு அதிக சப்தமின்றிப் படிக்க வேண்டும்.
தேர்வுக்காலங்களில் இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பது தவறு. குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும்.
படிப்பதை ஒப்புவிப்பத்தோடு இல்லாமல் எழுதிப்பார்ப்பது மிகவும் அவசியம்.
ஒரு பாடத்தை எழுதிப் பார்க்காமல் அடுத்தப் பாடத்தைத் தொடங்கக் கூடாது.
எழுதியதைப் புத்தகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் சேர்ந்து படிப்பதால் [GROUP STUDY] சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
தினமும் விடியற்காலை எழுந்து படிக்க வேண்டும்.
ஆங்கிலப் பாடத்தைக் காலையில் எழுந்து படிக்க வேண்டும்.
ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைப் படிக்கும்போது தெரியாதவற்றிற்கு அகராதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வாரப் பாடங்களை ஒருமுறை திருப்புதல் வேண்டும்.
தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்........... வெற்றி உறுதி.
Blogger news
Tuesday, 18 November 2014
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment