இந்தியாவின் முதல் பிரதமராய் இருந்த நேருவுக்குக் குழந்தைகள் என்றால்
மிகவும் பிடிக்கும். எனவே அவர் விருப்பப்படி 1955 நவம்பர் 14 முதல் நேருவின்
பிறந்த நாள், குழந்தைகள் தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேருவுக்குக் குழந்தைகள் என்றால்
மிகவும் பிடிக்கும். ஒருமுறை அவர் சட்டையில் ஒரு குழந்தை ரோஜாப்பூ வைச்சது. அப்போ
இருந்துதான் சட்டையில் ரோஜாப்பூ வைக்கிற பழக்கம் நேருவுக்கு வந்தது என்று சொல்லுவார்கள்.
இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை
மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி
அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம்
உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும்
திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து
ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.
ஒரு அப்பாவாக என் மகளிடம் குழந்தைகள் தினம் உனக்கு எந்த விதத்தில்
மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனக்கேட்டபோது பள்ளிக்கு அன்று வண்ண உடையில் செல்லலாம்
எனக் கூறினாள்.
சின்னச்
சின்ன நமது செயல்பாடுகள் கூட குழந்தைகளை சந்தோசத்தில் ஆழ்த்தும். இந்த குழந்தைகள்
தின விழாவில் குழந்தைகளாய் அவர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு ஆசிரியராய்
நாமும் அவர்களைப் புரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment