Blogger news

Showing posts with label சிறப்பு நாள்கள். Show all posts
Showing posts with label சிறப்பு நாள்கள். Show all posts

Wednesday, 12 November 2014

நவம்பர் 14 - நேருவின் பிறந்த நாள் - குழந்தைகள் தினவிழா by வே.இராஜகுரு


இந்தியாவின் முதல் பிரதமராய் இருந்த நேருவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவர் விருப்பப்படி 1955 நவம்பர் 14  முதல் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேருவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒருமுறை அவர் சட்டையில் ஒரு குழந்தை ரோஜாப்பூ வைச்சது. அப்போ இருந்துதான் சட்டையில் ரோஜாப்பூ வைக்கிற பழக்கம் நேருவுக்கு வந்தது என்று சொல்லுவார்கள்.
இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.

ஒரு அப்பாவாக என் மகளிடம் குழந்தைகள் தினம் உனக்கு எந்த விதத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனக்கேட்டபோது பள்ளிக்கு அன்று வண்ண உடையில் செல்லலாம் எனக் கூறினாள்.

சின்னச் சின்ன நமது செயல்பாடுகள் கூட குழந்தைகளை சந்தோசத்தில் ஆழ்த்தும். இந்த குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளாய் அவர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு ஆசிரியராய் நாமும் அவர்களைப் புரிந்து கொள்வோம். 

Saturday, 8 November 2014

நவம்பர் 11 - தேசிய கல்வி தினம் - இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்

ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள் என தெரிந்த நம்மில் பல பேருக்கு  இந்தியாவின் தேசிய கல்வி தினம் என்றைக்கு என தெரிந்திருக்காது.

இதோ தெரிந்து கொள்ளுங்கள்.........

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்  மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர்  11 தான் தேசிய கல்வி தினம் என்று.


மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது  (11 நவம்பர் 1888 – 22 பிப்ரவரி 1958) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.  பாகிஸ்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப் போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.  உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான  பாரத ரத்னா  மறைந்த பிறகு வழங்கப்பட்டது.  
சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜியுடன் ஆசாத்

பரவலாக இவர்  மௌலானா ஆசாத் என அறியப்படுகிறார்;  ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். 


இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவர் ஆற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி  மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.