Blogger news

Showing posts with label கல்வி தகவல்கள். Show all posts
Showing posts with label கல்வி தகவல்கள். Show all posts

Sunday, 8 February 2015

பிரச்னை நகையல்ல! - தினமணி தலையங்கம்

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்துவரக் கூடாது, செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு மாணவி தன் வகுப்புத் தோழியின் காதணிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த நேரத்துக்கான அதிரடி நடவடிக்கையாக இருக்கலாமே தவிர, இன்றைய பள்ளிச் சூழலுக்கும் வளர் இளம் பருவம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்க முடியாது
.
உறவினரை, மனைவியை, நண்பனை ஆத்திரத்தால், பொறாமையால் இறந்து போகும் நிலைக்கு காயப்படுத்தும் சம்பவங்களில் பெரும்பாலானோர் செய்யக்கூடியது, நகைகளை, உடைமைகளை எடுத்து மறைத்து, அந்தக் கொலையை யாரோ நகைக்காக செய்ததுபோல திசைதிருப்புவதுதான். வெறும் காதணிக்காக சக மாணவியைக் கொன்றிருக்கிறார் என்பது, முதல் தகவல் மட்டுமே. உண்மையில் அவர்களுக்குள் எத்தகைய நட்பு இருந்தது, அந்த நட்பு எவ்வாறு பகைமையானது, எதனால் மரணம் நேர்ந்தது என்று பல கோணங்களில் விசாரிக்க வேண்டிய வழக்கை, வெறும் காதணிக்காக கொலை என்று முடிவு செய்துவிட முடியாது.

இன்று மாணவர்கள் கொண்டு செல்லும் ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசி விலை மிக அதிகம். ஏறக்குறைய எல்லா மாணவர்களும் வைத்திருக்கிறார்கள். இன்று ஒரு 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தின் விலை சுமார் ரூ.60,000. பல மாணவர்கள், குறிப்பாக, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில்தான் வலம் வருகின்றனர். இன்றைய வளர் இளம் பருவத்தினர் அனைவரும் ஏ.டி.எம். அட்டை வைத்திருக்கின்றனர். பல மாவட்டங்களில் கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கவே செய்கிறது. வெறும் நகை, பணம், வாகனம், செல்லிடப்பேசி இவற்றுக்காக மட்டுமே சக மாணவனையோ, மாணவியையோ கொலை செய்ய முடியும் என்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கொலைக்களமாகத்தான் இருக்க வேண்டும். உண்மை நிலை அதுவல்ல.

இன்றைய வளர் இளம் பருவ மாணவர்களிடம் உள்ள சிக்கல், அவர்களது இனம் புரியா உணர்ச்சிக் கொந்தளிப்புதான். இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒருதலைக் காதலாக, தன் அந்தரங்கத்தில் அடுத்தவர் தலையீட்டின் காரணமாக, கேலியின் விளைவாக, பதிலுக்குப் பதில் கொடுக்கும் ஆக்ரோஷமாக இருப்பதுதான் பெரும்பாலும் இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. இந்தச் சிக்கலை உருவாக்கக்கூடிய, வன்மம் விளையும் இடமாக பள்ளி வளாகம் இருப்பதால், இந்த உணர்வுக் கொந்தளிப்பை நெறிப்படுத்தி, அமைதிகொள்ள செய்யும் இடமாகவும் பள்ளி வளாகம்தான் இருக்க முடியும்.

வளர் இளம் பருவத்தினரின் வன்மத்துக்கு அடிப்படைக் காரணம் தாங்கள் காட்டிக் கொடுக்கப்படுவதும், தங்கள் அந்தரங்கத்தில் பிறர் தலையிடுவது அல்லது அதைத் தெரிந்துகொண்டு தங்களை மிரட்டுவதும்தான். கல்லூரி வளாகங்களில் நடக்கும் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமே இவைதான். இதே காரணங்கள் இப்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டன. இந்த வகையில், உயர்நிலைப் பள்ளிகள் இளநிலைக் கல்லூரிகளாக மாறியிருக்கின்றன. இதுதான் உண்மையான சிக்கல்.

பள்ளிக்கு வராமல் தான் வெளியே சுற்றியதை வீட்டிற்குத் தெரியப்படுத்திவிட்டான் அல்லது வேறு மாணவர்களிடம் சொல்லிவிட்டான் என்பதிலும், தனது செல்லிடப்பேசியின் சேமிப்பு அறைகளைத் திறந்துப் பார்த்து அந்தரங்கங்களை அறிந்துகொண்டு விட்டான் என்பதிலும்தான் இன்று இளைஞர்களிடையே முதல் வன்மம் தொடங்குகிறது. நட்பின் எல்லை எது? ஒருவருடைய அந்தரங்கம் என்பது என்ன? எதைக் கேலி செய்யலாம்? எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் போன்ற பொது வெளி பழகு முறைதான் இன்று பள்ளியில் சொல்லித் தரப்பட வேண்டிய பாடம். இதை எப்படிச் செய்வது என்பது குறித்துதான் நமது கல்வித் துறை சிந்திக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு பாலியல் கல்வி தேவையே இல்லை. அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி என்று பேசுவது பயனளிக்காது. அவர்களிடம் சொல்ல வேண்டியது "கைக்கிளை' குறித்தும், "பொருந்தாக் காமம்' குறித்தும்தான். ஒருவரையொருவர் நேசிப்பதுதான் காதல் என்றாலும், உன்னை நேசிக்கும்படி இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை மாணவர்களுக்குப் புரிய வைப்பதுதான் இன்றைய தேவை. அதிகாரத்தாலும் பணத்தாலும் மிரட்டலாலும் காதலைப் பெற முடியாது என்பதை உணர்த்துவதுதான் இன்றைய பாலியல் கல்வியாக இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இருபது பேருக்கு ஓர் ஆசிரியரை, அவர் வகுப்பறைக்கு வெளியே தோழனாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், மாணவர்களின் திசைமாறும் போக்குகளை சுட்டிக் காட்டவும், பிணக்குகளில் விலகி நின்று சிக்கலை அவிழ்க்க உதவும் நண்பனாய் இருப்பவரே இன்றைய நல்லாசிரியர். அவர் நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறுவது நிச்சயமாக மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் கிடைக்க உதவாதுதான். ஆனால், அவர்கள் மனிதனாய் மாற அது உதவும்.

ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்.

Friday, 19 December 2014

பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கக் கோரி வழக்கு

கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதிமுக மாணவரணி மாநிலச் செயலர் டி.எம். ராஜேந்திரன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனு விவரம்: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு நகர்ப்புற பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்கள் குறைந்தது 5 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தேர்வு எழுத வேண்டியுள்ளது. இவ்வாறு வெகு தூரம் தேர்வு எழுதச் செல்வதால் மாணவர்கள் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைகின்றனர். பொதுவாக நல்ல மனநிலையில் மாணவர்கள் தேர்வை எழுதும்போதுதான் கூடுதலாக மதிப்பெண் பெற முடியும்.
இந்தவாய்ப்பு கிராமப்புறங்ளில் உள்ள மாணவர்களுக்கு இல்லாதால் அவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அதே சமயம் தங்கள் பள்ளிகளிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர்.
இதனால் மாணவர்களை வேறுபடுத்தும் நிலை உள்ளது. எனவே எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு கடந்த அக்.29இல் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் வழக்கம்போல் தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு தொடங்குவதற்குள் மையங்களை அந்தந்த பள்ளிகளில் ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் வி. தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை தனி நீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இந்தப்
படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது. 
 இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும். பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும். 
 பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது. இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Sunday, 14 December 2014

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
(என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள
வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர்
கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக்
காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
இந்தப் படிப்புகள்
இதுவரை ஓராண்டு படிப்புகளாக
இருந்து வந்தன. தரமான
ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில்
படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக
என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும்
உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள்,
கல்வி நிறுவனங்களுக்கான புதிய
வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல்
2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர்
கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல் உடனடியாக
நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர்
சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின்
தரத்தை மேம்படுத்துவதற்காக
பல்வேறு புதிய நடைமுறைகள்
கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதலின்படி,
இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த
இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப்
படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர்
கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.)
ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக
உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 200 வேலை நாட்கள்
கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும்,
பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும்
அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர்
பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர்
பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க
வேண்டும்.
பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும்
கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000
சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர்
பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க
வேண்டும்.
பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ.
வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும்
பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என
பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும்
இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப்
படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க
ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என
ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3
வயது முதல் 6 வயது வரையுடைய
குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில்
புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர்
பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ.
அறிமுகம் செய்துள்ளது.
இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த
பி.எட்.,எம்.எட். படிப்பு, 4
ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்.,
ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும்
வெளியிடப்பட்டுள்ளன.

Friday, 5 December 2014

அரசாணை எண் 201 இன் படி 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட தொடக்கப்பள்ளிகள் விவரம் 



885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டது.

வழக்கின் விபரம் :

ஒவ்வொரு வருடமும் 500 BRTEs ஆசிரியர்களாக பணிமூப்பு அடிப்படையில் பள்ளிக்கு மாற்றுவது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பாதி பேரும் இவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை. இதனை எதிர்த்து BRTEs சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதன் தீர்ப்பு 04.12.2014 அன்று  வழங்கப்பட்டது.


தீர்ப்பின் விபரம் :

885 ஆசிரியர் பயிற்றுநர்களை 15 நாட்களுக்குள் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலர், SSA SPD,  பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோர்க்கு உத்தரவு வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

Thursday, 4 December 2014

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

▶PUBLIC EXAM MARCH 2015 12TH TIME TABLE
MARCH 5TH - TAMIL PAPER 1
MARCH 6TH - TAMIL PAPER 2
MARCH 9TH - ENGLISH PAPER 1
MARCH 10TH - ENGLISH PAPER 2
MARCH 18TH - MATHS
MARCH 23TH - CHEMISTRY
MARCH 27TH - PHYSICS
MARCH 31ST - BIOLOGY
▶PUBLIC EXAM 10TH TIME TABLE
MARCH 19TH - LANGUAGE PAPER 1
MARCH 24 TH - LANGUAGE PAPER 2
MARCH 25TH - ENGLISH 1
MARCH 26TH - ENGLISH 2
MARCH 30TH - MATHS
APRIL 6TH - SCIENCE
APRIL 10TH - SOCIAL SCIENCE



ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

Tuesday, 2 December 2014

தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், மாணவ,
மாணவியரை குறைகூறுவதை விடுத்து,
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த
ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும்
என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள்
வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திலுள்ள
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ,
மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த
பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன . ஆனாலும் ,
அரசுப் பள்ளி மாணவ , மாணவியரின் கல்வித்
தரத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள்
ஏற்படவில்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம்
உள்ளன . சில மாதங்களுக்கு முன் , பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் , செயலர் , இயக்குநர்
ஆகியோர் , மாநிலம் முழுவதும் பள்ளிக்
கல்வித் துறை அதிகாரிகள்
கூட்டத்தை நடத்தி , ஆய்வு மேற்கொண்டனர் .
அப்போது , அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
80 சதவீத ஆசிரியர்கள் கல்வி போதிப்பதில்
முழு ஈடுபாடு காட்டுவதில்லை .
மாணவர்களை குறைகூறி தங்களது
கடமையிலிருந்து தவறி வருவதாகவும்,
இதன் தாக்கம் 10 ஆம் வகுப்பு , பிளஸ் 2
அரசு பொதுத் தேர்வுகளில் கடுமையாக
எதிரொலிப்பதாகவும் தெரியவந்தது .
மேலும் பாடங்களை மனனம் செய்வதால்
மாணவர்கள் உயர் கல்விக்குச்
செல்லும்போது தடுமாறுவதாகவும் ,
கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வில்
தெரியவந்தது . இதைத் தொடர்ந்து , அரசுப்
பள்ளி மாணவ , மாணவியரின் கல்வித்
தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக்
கூட்டம் சென்னையில் கடந்த வாரம்
நடைபெற்றது . அதில் , அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் , கல்வித்
துறை இணை இயக்குநர்கள், கல்வித்
துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர் .
கூட்டத்தில் , மாணவ , மாணவியர்களுக்கு 6, 7, 8
ஆம் வகுப்புகளில் இருந்தே கல்வி கற்பிப்பதில்
ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் . ஆங்கிலம் , கணிதம் , அறிவியல்
போன்ற பாடங்களில் முழு ஈடுபாட்டுடன் ,
அறிவுப்பூர்வமாக கற்கச் செய்துவிட்டால்
உயர் கல்வியில் மாணவர்களின்
தடுமாற்றங்களை அறவே தடுக்க முடியும் .
மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன்
கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டிய
கடமை ஆசிரியர்களைச் சார்ந்தது .
மாவட்டந்தோறும் 10 ஆம் வகுப்பு , பிளஸ் 2
அரசு பொதுத் தேர்வுகளுக்கு மாணவ ,
மாணவியரை தயார்படுத்த, 6, 7, 8 ஆம்
வகுப்புகளிலேயே போதிய
பயிற்சிகளை வழங்கி,
முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் .
இதற்கு , அனைத்துப் பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் மூலம்
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்டக்
கல்வித் துறை அதிகாரிகளை, அரசு பள்ளிக்
கல்வித் துறை உயர் அதிகாரிகள் கேட்டுக்
கொண்டுள்ளதாக, கல்வித் துறை உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, 29 November 2014

நேரடி தனித்தேர்வர்கள் – SSLC செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான அறிவிப்பு



நேரடி தனித்தேர்வர்கள் 2014 – 2015 - ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி (SSLC) பொதுத்தேர்வில் கலந்து கொள்ள நடத்தப்பெறும் செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான விண்ணப்பம் அனுப்பும் அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு & விண்ணப்பம்

துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால் மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்: ஆய்வு



நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும் என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த, புது யுக்திகளை பயன்படுத்த, காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, திண்டுக்கல் தனியார் பள்ளியில், 45 மாணவர்களிடம், கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் நர்மதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாணவர்களின் எடை, ரத்தம், உணவுப் பழக்கம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நரம்பு செல்களில், துத்தநாகம் குறைந்த மாணவர்களின் அறிவு, கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்கள், துத்தநாக சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வதால் இந்தநிலை ஏற்பட்டதாக தெரியவந்தது. மாணவர்களின் உணவுப் பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது.

பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது: துத்தநாகம், நரம்பு செல்களுக்கு இடையேயுள்ள பொருள். நரம்பு மண்டலத்தில், நியூரான்கள் உருவாகவும், இடம் பெயர்தலுக்கும் பயன்படுகிறது. உடலில், 2.3 கிராம் அளவிற்கு இருக்கும். சிறந்த, ஆக்சிஜனேற்றியாக உள்ளதால், மூளைக்கு தங்குதடையின்றி தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது.

இது குறைந்தால், மாணவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுகிறது. உடம்பிற்கு, துத்தநாகம் குறைந்த அளவே தேவைப்பட்டாலும், மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. அவித்த முட்டை, பாசிப்பயிறு, பருப்பு வகைகளில் துத்தநாக சத்து உள்ளதால், அதை மாணவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.