Blogger news

Thursday, 4 December 2014

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment