Blogger news

Saturday, 27 December 2014

உதவி கிடைச்சா பயப்படுவாங்களா? - ஜி.எஸ்.சுப்ரமணியன் - தி இந்து

    ஒரு வாசகர் “தவறு இழைக்கும் நாடுகளுக்கு எதிராக economic sanctions-ஐ பிற நாடுகள் செயல்படுத்த வேண்டும் என்கிறார்களே. இது அந்த நாடுகளுக்கு நல்லதுதானே. எனக்குப் புரியவில்லை’’ என்று ஆச்சரியப்படுகிறார். 

   ஆச்சரியம் வேண்டாம் நண்பரே. இது ஒன்றும் “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’’ வகையான ஆலோசனை அல்ல. Sanction என்பதற்கும், sanctions என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. 

அனுமதியும் தடையும்
 
Sanction என்றால் அனுமதித்தல். I hereby sanction you the ten days leave requested என்பதுபோல. இதே அர்த்தத்தில் அதன் பன்மையாகவும் சில சமயம் sanctions என்பது பயன்படுத்தப்படுவது உண்டு. 

ஆனால் sanctions என்பதற்கு மற்றொரு முக்கிய அர்த்தம் உண்டு. சட்டத்தையோ, நல்லொழுக்கத்தையோ பின்பற்றாதவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையையும் அப்படிச் சொல்வதுண்டு. அதாவது penalty, deterrent என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் economic sanctions-ஐ விதிக்கின்றன என்றால் அந்த நாட்டுடனான வணிக உறவுகளைத் துண்டித்துக் கொள்கின்றன என்று அர்த்தம். இதனால் அந்த நாட்டுக்குப் பொருளாதார இழப்பு. அரசியல்ரீதியான எதிர்ப்பைச் சமாளிக்கும் நாடுகள்கூட பிற நாடுகளின் economic sanctions-ஐ சமாளிப்பது கஷ்டம். 

பாதிப்பும் நஷ்டஈடும்
 
இதுபோலத்தான் Damage, Damages ஆகிய வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாடு. Damage என்றால் பாதிப்பு. The property was damaged by the cyclone. சில சமயம் இதைப் பன்மையில் damages என்று குறிப்பிடுவதுண்டு.
ஆனால் damages என்றால் நஷ்டஈடு என்பது பொதுவான அர்த்தம். ஒரு நீதிபதி “I hereby order Mr.X to pay Mr.Y damages of Rupees one lakh” என்று கூறலாம். ஆக S சேர்த்ததில் அர்த்தமே மாறிவிட்டது. 

இது CARDIOLOGY பிரிவு!
 
ஆங்கில நாவல் ஒன்றில் “Set the heart at rest’’ என்று ஒரு நண்பர் படித்தாராம். “இதற்கு அர்த்தம் என்ன?’’ என்று கேட்டுள்ளார். இது கொலை அல்லது தற்கொலையைக் குறிக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். உடனடியாக I should set his heart at rest. பதற்றம் வேண்டாம் நண்பரே. 

கவலையில்லாமல் (அதாவது கவலையைப் போக்கும் விதத்தில்) செய்வதுதான் “setting the heart at rest’’. This letter will set your heart at rest. 

இதயம் தொடர்பான வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. 

“The house was after my heart’’ என்றால் எனக்கு எது போன்ற வீடு வேண்டுமென்று நினைத்தேனோ, அது போலவே இருக்கிறது என்று அர்த்தம். 

The death of my uncle broke my heart என்றால் தாங்க முடியாத துயரத்தை அந்த இறப்பு அளித்தது என்று அர்த்தம். 

From the bottom of my heart என்றால் மிகவும் உண்மையாக என்று பொருள். I thank everyone from the bottom of my heart. 

Heart of hearts என்றால் மனதின் ஆழத்தில் என்று அர்த்தம். In my heart of hearts, I consider this death to be a murder. 

Have one’s heart in one’s boots என்றால் மிகவும் கவலையுடன் இருப்பது. அதாவது depressed. 

Embrace - Embarrass 

Embrace என்றால் தழுவுதல். 

I embraced my friend after he won the tournament. 

தழுவுதல் என்பதை உருவகமாகவும் பயன்படுத்துவதுண்டு. 

அம்பேத்கார் புத்த மதத்தைத் தழுவினார் என்பதை Ambedkar embraced Buddism எனலாம். 

Embarrass என்பது ஒருவிதச் சங்கட உணர்ச்சியைக் குறிக்கிறது. அதாவது தற்செயலாக நடந்துவிடும் ஒன்று. மீதி பேருக்கு இது தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கக் கூடிய ஒன்று. இதன் மூலம் கொஞ்சம் அவமானம் நேரலாம் எனும்படியான விஷயம். 

He felt embarrassed, upon falling down on this stage before a huge audience. Never feel embarrassed to admit your weaknesses. 

இந்த வார்த்தைகளின் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டவர்கள் “நீ என்னைச் சங்கடப்படுத்துகிறாய்’’ என்று காதலி ஆங்கிலத்தில் கூறும்போது, கைகளை முன்புறம் விரித்தபடி பரவசத்துடன் அவளை நோக்கி முன்னேற மாட்டார்கள்.

No comments:

Post a Comment