Blogger news

Friday 31 October 2014

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பதவி உயர்வுக்கு நாளைகலந்தாய்வு

அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-
ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்
என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:
அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம்
நவம்பர் 2-ஆம் தேதி காலை 10
மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம்
ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி,
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494
முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள
ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம்
தேதி) நடைபெற்ற கலந்தாய்வில்
கலந்துகொண்டு ஆணை பெற
வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட
கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள
முதன்மைக்
கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு
ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 8


தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி – 7


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் - NMMS TAMILNADU - OLD QUESTION PAPERS

பணி ஓய்வு பெற்றவருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் வழங்க நீதி மன்றம் அதிரடி உத்தரவு - தீர்ப்பு நகல்

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரிஆசிரியராக 2007ல் பணியில்  சேர்ந்து 
31.05.2012 - ல் ஓய்வு பெற்ற காமாட்சி என்பவர் 
ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் 
வழங்க
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

அவரிடம் பிடித்தம் செய்த தொகை - ரூபாய் -2,91,900/-



இவரை போல பல பேர் இன்னும்  ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர். இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால்ஓய்வூதியம் 
பெற முடியும் .

தகவல் - நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் 


தொடர்புக்கு - engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com 

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மறு நியமனம்

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD – G.O.No.170 SCHOOL EDUCATION DEPT DATED.23.10.2014

டிசம்பரில்ஆறு நாட்களுக்கு இருளில்மூழ்கப் போகும் உலகம்:நாசா அறிவிப்ப

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் நாள்  முதல் 22ஆம் நாள் வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது. இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும். 216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார். இது சம்பந்தமாக மேலும் விவரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.

GPF / TPF RATE OF INTEREST FROM1994-95 TO 2013-14

G.P.F / TPF RATE OF INTEREST:
1994 - 1995 to 1999 - 2000 = 12%
2000-01 = 11%
2001-02 = 9.50%
2002-03 = 9%
2003-04 to 2011-2012 = 8%
2012-13 = 8.80%
2013-14 = 8.70%

Thursday 30 October 2014

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக
நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 11    வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 15    திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
டிசம்பர் 17    புதன்கிழமை - கணிதம்,
நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்,
உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)
டிசம்பர் 18    வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட்
அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி
டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை -
தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்
டிசம்பர் 22    திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்
டிசம்பர் 23    செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்
பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை
:
டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15    திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 17    புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை - கணிதம்
டிசம்பர் 22    திங்கள்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

Wednesday 29 October 2014

தடை இரத்து - நீதிமன்றம்உத்தரவு

2014-15ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதால் விரைவில் அப்பணியிடத்தில் ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் விரைவில் சேர உள்ளதாக வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில், நீதிமன்ற தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சி என்றும், மேலும் 2014-15ம் கல்வியாண்டில் அறிவிக்கப்பட்ட புதியதாக தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தி தலைமையாசிரியர்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை வைத்தார்.

Tuesday 28 October 2014

ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விவரம்

பள்ளித்துணை ஆய்வாளர் பதவி உயர்வு பெற ஆசிரியர்கள் எழுத வேண்டிய  துறை தேர்வுகள் விபரம்

1.     004 - Deputy Inspectors Test-First Paper
                (Relating to Secondary and Special Schools) (without books)

2.     017 - Deputy Inspector’s Test--Second Paper
                 (Relating to Elementary Schools) (Without Books)

3.     119 - Deputy Inspector’s Test  - Educational Statistics (With Books).

4.     176 - Account Test for Subordinate Officers - Part I .   (or)

     114 - The Account Test for Executive Officers (With Books).


5.     208 - The Tamil Nadu Government Office Manual Test
                  (Previously the District Office Manual--Two Parts) (With Books).


உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்டக்கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற ஆசிரியர்கள் எழுத வேண்டிய  துறை தேர்வுகள் விபரம்


1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).


2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

Monday 27 October 2014

பத்தாம் வகுப்புக்கான எளியமுறையிலான அறிவியல் செய்முறைகள்



தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க இராமநாதபுரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.லிங்கராஜ் அவர்கள் உருவாக்கிய பத்தாம் வகுப்புக்கான எளியமுறையிலான அறிவியல் செய்முறைகள் 

பகுதி 1 

பகுதி 2 

பகுதி 3 

பகுதி 4

பத்து ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

பத்து ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை முதல்வரின் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவலைப் பெற
CLICK HERE

Wednesday 22 October 2014

NEW HEALTH INSURANCE SCHEME – 2012 – NHIS 2012 – RELATED GOVT ORDERS

CLICK ON THE LINK TO DOWNLOAD THE GOVT ORDER





Letter No. 16840 dated 12th April 2013 on inclusion of additional diseases, treatments and surgeries – New Health Insurance Scheme, 2012 New 


G.O Ms.No.243 dated 29th June 2012 on MEDICAL AID – New Health Insurance Scheme, 2012  


G.O Ms.No.221 dated 20th June 2012 on MEDICAL AID – New Health Insurance Scheme, 2012  


Govt. Lr. No. 54361/ Sal/ 2009-1 dated 22.10.2009     

NHIS HOSPITAL MODIFICATION - GO No 837 Fin Dt 24.11.2014


மேலும் விவரங்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட NHIS  அலுவலக செல்பேசி எண்: 7373703123

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் 

http://www.tnnhis2012.com

23.08.2010 க்குப் பின்னர் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணை


நெட் (NET) தேர்வு அறிவிப்பு



கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவம்பர் 15 கடைசித் தேதியாகும். அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசித் தேதியாகும். "ஆன்-லைன்' விண்ணப்பத்தை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசித் தேதியாகும்.