என்னதான் ஆங்கிலம் படித்திருந்தாலும்
தாய்மொழியில் கடிதம் எழுதுவதைப் போல் ஆங்கிலத்தில் சரியான கடிதத்தை எழுத
முடியவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருக் கின்றனர்.
தாங்கள் எழுதும் ஆங்கிலக் கடிதங்களில்
எழுத்துப் பிழை, இலக்கணப்
பிழை என்று ஏதாவது
தவறு வந்து விடுமோ? இதன்
மூலம் நம்முடைய கருத்தில் பெரும் தவறு நேர்ந்துவிடுமோ? என்னும் அச்சம் எல்லோரிடமும்
இருக்கத்தான் செய்கிறது. இந்த அச்சத்தைப் போக்கிட, ஆங்கிலத்தில் பல்வேறு வகையான
கடிதங்களைக் கொண்டு ஒரு இணையதளம் செயல்பட்டுவருகிறது.
கடித தளம்
இந்த இணையதளத்தில் ஒப்புதல் (Acceptance),
ஒப்புகை (Acknowledgement),
உடன்படிக்கை (Agreement),
அறிவிப்பு (Announcement),
மன்னிப்பு (Apology),
மேல் முறையீடு (Appeal),
விண்ணப்பம் (Application),
நியமனம் (Appointment),
மதிப்புயர்வு (Appreciation),
அதிகாரமளிப்பு (Authorization),
பிறந்தநாள்
(Birthday), வணிகம் (Business),
நீக்கம் (Cancellation),
சான்றளித்தல்
(Certification), முறையீடு
(Complaint), இரங்கல்
(Condolence), உறுதி செய்தல்
(Confirmation), வாழ்த்துகள்
Congratulations), திறனாய்வு
(Criticism), பணி நீக்கம் (Dismissal),
நன்கொடை (Donation),
ஏற்பிசைவு
(Endorsement), வழியனுப்புரை
(Farewell), பின்
தொடர் (Follow Up), முறைப்படியான
(Formal), நட்பு
(Friendship), நிதி
திரட்டுதல் (Fundraising), பிரியாவிடை
(Goodbye), புகார்
(Grievance), விசாரணை
(Inquiry), நேர்காணல் (Interview),
அறிமுகம் (Introduction),
அழைப்பிதழ்
(Invitation), விடுப்பு (Leave),
காதல் (Love),
சந்தைப்படுத்தல்
(Marketing), ஒழுங்கு (Order),
அனுமதி (Permission),
வசமாக்குதல்
(Persuasive), பணி உயர்வு (Promotion),
பரிந்துரை (Recommendation),
மேற்கோள் (Reference),
வேண்டுகோள் (Request),
பணித் துறப்பு (Resignation),
பணி ஓய்வு (Retirement),
காதல் நயம் (Romantic),
நன்றி (Thank
You), இடமாற்றம் (Transfer),
எச்சரிக்கை (Warning),
வரவேற்பு (Welcome)
என்பன உள்ளிட்ட
69 வகையான மாதிரி கடிதங்கள்
இடம் பெற்றிருக்கின்றன.
மாற்றி யோசி!
ஒவ்வொரு தலைப்பையும் சொடுக்கினால்,
அத்தலைப்புடன்
தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட கடித மாதிரிகள் தரப்பட்டிருக்
கின்றன. இத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் 1350க்கும் அதிகமான மாதிரிக்
கடிதங்களிலிருந்து நமக்குத் தேவையான மாதிரிக் கடிதத்தை எடுத்து, நமக்கேற்றவாறு சிறு சிறு மாற்றங்களை
மட்டும் செய்து புதிய கடிதங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
அப்புறமென்ன, ஆங்கிலக் கடிதம் எழுத இனிச் சிறிதும்
அச்சப்பட வேண்டாம். http://www.letters.org எனும் இணைய முகவரிக்குச் சென்று நாமும்
ஆங்கிலக் கடிதங்களை
எழுதி அசத்தலாம்.
No comments:
Post a Comment