Blogger news

Wednesday, 29 October 2014

தடை இரத்து - நீதிமன்றம்உத்தரவு

2014-15ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதால் விரைவில் அப்பணியிடத்தில் ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் விரைவில் சேர உள்ளதாக வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில், நீதிமன்ற தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சி என்றும், மேலும் 2014-15ம் கல்வியாண்டில் அறிவிக்கப்பட்ட புதியதாக தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தி தலைமையாசிரியர்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment