Blogger news

Friday, 31 October 2014

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பதவி உயர்வுக்கு நாளைகலந்தாய்வு

அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-
ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்
என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:
அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம்
நவம்பர் 2-ஆம் தேதி காலை 10
மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம்
ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி,
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494
முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள
ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம்
தேதி) நடைபெற்ற கலந்தாய்வில்
கலந்துகொண்டு ஆணை பெற
வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட
கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள
முதன்மைக்
கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு
ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment