Blogger news

Thursday, 27 November 2014

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,வீடு கட்ட வழங்கப்படும் மொத்ததொகையில்,வீட்டு மனை வாங்க,முன்பணமாக, 20 சதவீதம்வழங்கப்படுவதை, 50 சதவீதமாகஉயர்த்தி வழங்க,அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட, 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது.வீட்டு மனை வாங்க, கடன் தொகையில், முன் பணமாக, 20 சதவீதம் வழங்கப்பட்டது.இதை, 50 சதவீதமாக, உயர்த்தி வழங்க வேண்டும் என, தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது.அதை பரிசீலித்த அரசு, 20 சதவீதமாக வழங்குவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், முன்பு,
முன்பணமாக, அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் பெற்றனர். இனிமேல், 12.50 லட்சம் ரூபாய் பெறலாம். இதற்கான ஆணையை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தலைமைச் செயலக ஊழியர் சங்கம், நன்றி தெரிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD - G.O No.: 171  HOUSING & URBAN DEPT Dated : 26/11/2014

No comments:

Post a Comment