Blogger news

Friday, 7 November 2014

தேர்வு முடிவு எதுவாயினும் குழந்தைகளை ஒரு புன்னகையோடு அரவணையுங்கள்.

நல்ல மதிப்பெண்களோடு வரும் குழந்தையை " உம் " மென்று அணுகாதீர்கள். " உன்னைத் தவிர வேறு யாருக்கு இது சாத்தியப் படுமென்று? " பொய்யாகவேனும் கொண்டாடுங்கள்.
ஒருக்கால் குறைவாய் பெற்றுவிட்டான் எனில் கோபப்பட வோண்டாம்.
வெறும் 575 மட்டுமே பெற்ற என்னையே என் அப்பாவும் அம்மாவும் கொண்டாடினார்கள். நான் என்ன குறைந்தா போய்விட்டேன். ஒன்று தெரியுமா?,
575 எடுத்த நான் இன்று ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியன். 923 எடுத்த என் வகுப்புத் தோழன் இப்போது ஒரு பள்ளியில் ரெக்கார்டு கிளார்க்.
ஒன்றும் இல்லை மதிப்பெண்களில் என்பதை உணருங்கள். குழந்தையைக் கொண்டாடி உற்சாகப் படுத்துங்கள். பெரிதாய் வருவான்.
தேர்வில் தோற்றுப்போன என் வகுப்புத் தோழன் ஒருவன் இன்று முப்பது பேர் பணியாற்றக்கூடிய நிறுவனத்தின் முதலாளி.
ஒருக்கால் பிள்ளை தோற்றே போயிருப்பின் அதிக அன்போடு " விடுப்பா. இப்ப பாஸ் பண்ணினவன் எல்லாம் என்ன பெரிய மேதையா? பார்த்துககலாம் வா" என்று உற்சாகப் படுத்துங்கள். கூடுமான வரைக்கும் கூடவே இருங்கள்.
இது போனால் ஜூனில்,அக்டோபரில், மார்ச்சில் என்று வாய்ப்புகள் உண்டு. குழந்தை போனால்?

முடிவு எதுவாயினும் குழந்தைகளை அன்போடும் புன்னகையோடும் வாரிக் கொள்வோம்.

- இரா.எட்வின்.

No comments:

Post a Comment