தொல்லியல் துறை
சார்பில் நடக்கும் உலக மரபு வாரவிழாவையொட்டி, நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள
நினைவு சின்னங்களை இலவசமாக பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட
தொல்லியல் துறை காப்பாச்சியர் சக்திவேல் கூறியதாவது: மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தரங்கம்பாடி, பட்டுக்கோட்டை
உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் பழங்கால நினைவு
சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சின்னங்களை காண வரும்
பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 19 முதல்
25ஆம் தேதி வரை இத்துறை சார்பில் உலக மரபு வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி
ஒருவாரம் நடக்கும் விழாவில் நினைவு சின்னங்களை பார்வையிட வருவோர் இலவசமாக
அனுமதிக்கப்பட உள்ளனர்.
நமது பள்ளிகளில் செயல்பட்டுவரும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் பயன்பெறச் செய்யலாமே!!
No comments:
Post a Comment